May 24, 2026
Thisaigal NewsYouTube
ஈஷாவின் தாயாருக்குத் தொடர்பு அமைச்சர் நன்கொடை வழங்கினார்
தற்போதைய செய்திகள்

ஈஷாவின் தாயாருக்குத் தொடர்பு அமைச்சர் நன்கொடை வழங்கினார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18-

சமூக ஊடகங்களைக் கட்டுபடுத்தவும், கண்காணிக்கவும் சிறப்பு நடவடிக்கை குழு ஒன்று அடுத்த வாரம் தோற்றுவிக்கப்படும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தொடர்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, பிரதமர் துறைக்கான சட்ட விவகாரங்கள் துறை, பிரதமர் துறை மற்றும் தேசிய சட்டதுறை அலுவலகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் அந்த சிறப்பு நடவடிக்கை குழுவில் உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இணையப்பகடிவதையால் தற்கொலை செய்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சமூக ஊடக பிரபலம் ராஜேஸ்வரி எனும் ஈஷாவின் தாயாரான பிஆர் புஸ்பா-வை பண்டார் பாரு அம்பாங் -இல் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஃபஹ்மி ஃபாட்சில் இன்று நன்கொடை வழங்கியுள்ளார்.

முன்னதாகம் இணையப்பகடிவதையால் பாதிக்கப்பட்ட ஈஷா கடந்த ஜூலை 5-ஆம் தேதி சேடபக்-இல் உள்ள ஆடம்பர அடுக்ககத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News