சிக், நவம்பர்.08-
கெடா, சிக்கில் உள்ள ஒரு கிராமத்தில் ரப்பர் பால் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
கடந்த ஒரு மாத காலமாக யாருடனும் பேசாமல் விரக்தியுடன் காணப்பட்ட 65 வயதுடைய அந்த நபர், வீட்டின் பின்புறம் ரம்புத்தான் மரத்தடியில் இறந்து கிடந்ததாக சிக் மாவட்ட போலீஸ் தலைவர் சஃபுவான் முகமட் நோர் தெரிவித்தார்.
சவப் படிசோதனைக்காக சடலம் சிக் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








