Aug 7, 2026
Thisaigal NewsYouTube
'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

Share:

சிலாங்கூரில் ஆயுதக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் மீது நாளை செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

இது குறித்து புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவியல் சட்டம் பிரிவு 130V(1)-இன் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெற்ற ஆப்ஸ் ராபிடோ நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அவர்கள் 11 பேரும், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஆயுதக் கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை மூலம் 21 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள மேலும் 5 கும்பல் உறுப்பினர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்றும் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி