May 26, 2026
Thisaigal NewsYouTube
RAP பெண்பாடகியை ஆடையின்றி படம் எடுப்பதா? விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

RAP பெண்பாடகியை ஆடையின்றி படம் எடுப்பதா? விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Share:

டிச. 7-

பெட்டாலிங் ஜெயா, SS14 இல் உள்ள ஒரு உடம்புப்பிடி நிலையத்தில் உள்ளூரைச் சேர்ந்த ரேப் பாடகி ஒருவரை ஆடையின்றி வீடியோ படம் எடுத்ததாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் அதிகாரி ஒருவருக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகார் குறித்து தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில் அந்த உடம்புப்படி நிலையத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரியும் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்து இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Wan Azlan Wan Mamat தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட உடம்புப்பிடி நிலையம், வர்த்தக உரிமம் நிபந்தனையை பின்பற்றவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அந்த உடப்புபிடி நிலையத்தை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு ஆதாரம் தேவை என்பதற்காக அந்த வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக தமது தற்காப்பு புகாரில் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் என்று வான் அஸ்லான் தெரிவித்துள்ளார்.

சோதனையின் போது சம்பந்தப்பட்ட பெண் ஒத்துழைப்பு நல்கவில்லை என்றும் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டதாகவும் அந்த அதிகாரி தமது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக வான் அஸ்லான் மேலும் கூறினார்.

ஒரு வாடிக்கையாளராக உடம்புப்பிடி நிலையத்தில் தாம் சென்றிருந்த வேளையில் உடலில் துண்டை மட்டுமே அணிந்திருந்த நிலையில், சுபாங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தம்மை வீடியோ படம் எடுத்துள்ளதாக உள்ளூர் ரேப் பாடகி sharifah Zamaera Al Edros Syed Zafilen கடந்த வியாழக்கிழமை சமூக தளத்தில் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வான் அஸ்லான் விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு