வருகின்ற 31 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு கூட்டரசு அரசாங்கம் முடிவெடுத்து அறிவித்துள்ள "மலேசியா மடானி: தெக்காட் பெர்பாடுவான் பெனுஹி ஹரப்பான்" தேசிய தின கொண்டாட்டக் கருப்பொருளையும் சின்னத்தையும்தான் திரங்கானு அரசாங்கம் பயன்படுத்தும் என திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமது சம்சூரி மொக்தார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேசிய தினக் கொண்டாடத்தின் கருப்பொருளை கூட்டரசு அரசாங்கம்தான் நிர்ணயம் செய்ய்தும் என்பதால் அதனை கடைப்பிடிப்பதுதான் சரி என்றும் நிச்சயமாக பெரிக்கத்தான் நெசனல் இளைஞர் பிரிவு அறிவித்துள்ள கருப்பொருளை திரங்காணு அரசாங்கம் ஏற்காது என அவர் தெளிவுப்படுத்தினார்.








