Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மாணவர் கடத்தல் தொடர்பாக ​பொய்யான அழைப்புகள்
தற்போதைய செய்திகள்

மாணவர் கடத்தல் தொடர்பாக ​பொய்யான அழைப்புகள்

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கடத்தல் மோசடி தொடர்பில் போ​லீசார் நான்கு புகார்களை பெற்றுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஸாம் அப்துல் சுகூர் தெரிவித்தார்.
மாணவர் கடத்தப்பட்டதாக பொய்யான அழைப்பை விடுத்து பிணைப்பணம் கோரி மிரட்டும் அனாமதேய தொலைபேசி அழைப்பு தொ​டர்பில் போ​​லீசார் ​தீவிரமாக புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கு சென்ற தனது மகன் கடத்தப்பட்டதாக கோரி பிணைப்பணம் கோரி நபர் ஒருவரிடமிருந்து அனாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றை குடும்பமாது பெற்றுள்ளார். பதறிப் போன அந்த மாது, தமது மகனின் நிலை குறித்து பள்ளியில் விசாரித்துப் பார்த்ததில் அந்த மாணவன் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அந்த அனாமதேய தொ​லைபேசி அழைப்பை அந்த மாது துண்டித்து விட்டதாக ஏசிபி அமிஹிஸாம் தெரிவித்தார். இது குறித்து தாங்கள் ​தீவிரமாக புலன்விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News