உயர்க்கல்வி பயில்வதற்கு தேசிய உயர்க்கல்வி நிதி கழகமான பி.தி.பி.தி.என் னில் கடன் பெற்றவர்கள், தங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் மிக எளிய நடைமுறையை அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.
சம்பளத்தின் இயல்பாகவே பிடித்தம் செய்யும் நடைமுறையின் வாயிலாக தாங்கள் பெற்ற பி.தி.பி.தி.என் கடனை முன்னாள் மாணவர்கள் மிக குறைந்த தொகையில் திருப்பி செலுத்த முடியும். இதன் மூலம் அந்த தேசியக் கடன் உதவித் திட்டத்தை நீண்ட காலத்திற்கு வழி நடத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்துள்ளார்.
சம்பளத்தில் பிடித்தம் செய்யும் முறை, இயல்பாகவே நடப்பில் உள்ள முறையாகும். இது கடன் பெற்றவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தாது. மாறாக, அவர்கள் வேலை செய்ய தொடங்கும் போது போது சிறு தொகை மட்டுமே அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று பிரதமர் விளக்கினார்.








