Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தீயிட்டவருக்கு எதிராக போலீசார் வளைவீச்சு
தற்போதைய செய்திகள்

தீயிட்டவருக்கு எதிராக போலீசார் வளைவீச்சு

Share:

ஜன.10
டிஏபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி ஆலோசகருமான ஙெ கூ ஹாம் மின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக நம்பப்படும் நபர்களுக்கு எதிராக போலீசார் தீவிர கைது வேட்டையைத் தொடங்கியுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

பேரா, மன்ஜுங், அருகில் அயெர் தாவார், தாமான் செமாராக் ஜெயாவில் உள்ள ஙெ கூ ஹாம் வீட்டில் இன்று புதன்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில்ஙெ கூ ஹாம் மற்றும் அவரின் மனைவி உயிர்தப்பியுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக அதிகாலை 2.55 மணியளவில் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙெ கூ ஹாம்மிடமிருந்து ஆயர் தாவார் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக முஹமாட் யுஸ்ரி குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டம் 435 பிரிவின் கீழ் இச்சம்பவம் தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். .

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்