Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மனைவியை அடித்துக் காயப்படுத்திய விரிவுரையாளருக்கு அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனைவியை அடித்துக் காயப்படுத்திய விரிவுரையாளருக்கு அபராதம்

கோலாலம்பூர், ஜூன்.30-

இரண்டு வாரங்களுக்கு முன்பு, தனது மனைவியை அடித்துக் காயப்படுத்தியக் குற்றத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 1,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஒரு மாத சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் அதிகா முகமட் தெரிவித்தார்.

ஒரு தாய்லாந்துப் பிரஜையான 45 வயது இப்ராஹிம் தோயாலா என்ற அந்த விரிவுரையாளர் கடந்த ஜுன் 15 ஆம் தேதி கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →