இளைஞர்கள், குறிப்பாக இளம் வாக்காளர்கள் அரசியலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் வழி, நாட்டின் தேசியக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவர்களால் பங்கு வகிக்க முடியும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர்தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இளைஞர்களில் சிலர் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், ஏனெனில், அவர்கள் சில அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் ஏமாற்றமடைந்து, அரசியல் வேண்டாம் என்று கூட நினைக்கிறார்கள். ஆனால், நாட்டில் மாற்றத்தை கொண்டு வர, அரசியல் மிக முக்கியமான தளமாக அமைகிறது.
"அரசியல் பணிகளில் இளைஞர்களை தொடர்ந்து அதிகமாக ஈடுபடுத்துவது முக்கியம். ஏனென்றால், ஒர் அரசாங்கம் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பதை புரிந்துக் கொள்வது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கொள்கையும் நம் வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்," என்று "தியோ உடன் சிட் சாட்" கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"அடிப்படையில் அரசியல், அரசியல்வாதிகளை உருவாக்கும் என்பதை இளையோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மாநில சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் கொள்கைகளை அரசியல்வாதிகள் தீர்மானிப்பார்கள். ஆகவே, அரசியலில் ஈடுபட இளைஞர்களை தாம் திடமாக ஊக்குவிப்பதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
நாட்டின் அடுத்த கட்ட இலக்கை அரசியல் நிர்ணயிக்கின்றது என்பதை இளைஞர்கள் புரிந்திருக்க வேண்டும் - தியோ
Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


