Aug 14, 2026
Thisaigal NewsYouTube
சாலைப் பாதுகாப்பு: நாடு முழுவதும் 99 விபத்து அபாயப் பகுதிகள் அடையாளம்
தற்போதைய செய்திகள்

சாலைப் பாதுகாப்பு: நாடு முழுவதும் 99 விபத்து அபாயப் பகுதிகள் அடையாளம்

Share:

நாடு முழுவதும் கூட்டரசு சாலைகளில் அடிக்கடி உயிரிழப்பு விபத்துகள் ஏற்படும் 99 இடங்களை விபத்து அபாயப் பகுதிகளாக பொதுப்பணித் துறை அடையாளம் கண்டுள்ளது.

சாலை விபத்து நிர்வாக அமைப்பு எனப்படும் ஆர்.எ.எம்.எஸ் மூலம் இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

மை ஜாலான் முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஆர்.எ.எம்.எஸ், சாலை விபத்துத் தரவுகளை முறையாக நிர்வகித்து, ஆய்வு செய்து, விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிய உதவுவதாக அவர் கூறினார்.

மலேசியாவில் தினமும் சராசரியாக 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பது மிகவும் கவலையளிப்பதாக நந்தா தெரிவித்தார்.

மேலும், போலீஸ் துறையின் ஒருங்கிணைந்த காவல் அறிக்கை முறையிலிருந்து பெறப்படும் விபத்துத் தரவுகள், ஆர்.எ.எம்.எஸ் உடன் இணைக்கப்படுவதால், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் திட்டமிட முடியும் என்றும் அவர் கூறினார்.

Related News