கோலாலம்பூர், அக்டோபர்.26-
சிலாங்கூரில், டாமன்சாரா, சுபாங் ஜெயா ஆகியப் பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டத் தளங்களை உருவாக்கி, அதன் உதிரிபாகங்களையும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கு விநியோகித்து வந்த ஏழு அலுவலகங்களிலும் கிடங்குகளிலும் காவற்படை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி நடந்த இந்தச் சோதனையில், உள்நாட்டைச் சேர்ந்த 110 ஆண்களும், 30 பெண்களும் உட்பட மொத்தம் 147 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 140 பேர் உள்ளூர்வாசிகள்; ஏனைய ஏழு பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கைப்பற்றப்பட்ட சூதாட்டக் கருவிகளும் இணையத் தளங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டது உறுதிச் செய்யப்பட்ட நிலையில், 133 பேர் மீது சூதாட்டச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








