கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிடுகிறார்.
இன்று பிற்பகல் 2.15 மணியளவில், பெனம்பாங், கண்ட்ரி ஹைட்ஸில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடத் தொடங்கும் அவர், பின்னர் எஸ்கே செயின்ட் போல் கோலோப்பிஸ் நிவாரண மையம் மற்றும் கம்போங் சாராபுங் பிபிஎஸ் மையம் ஆகிய இடங்களுக்கும் செல்கிறார்.
அதன் பின்னர், கோத்தா கினபாலு, காயா வளாகத்திலுள்ள உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தைப் பார்வையிட்டு, அங்கு தங்கியிருக்கும் மக்களின் நிலைமைகளையும், தேவைகளையும் கேட்டறிகிறார்.
அதன் பின்னர், பிரதமர் அன்வார், இன்று மாலையே மீண்டும் கோலாலம்பூருக்குத் திரும்புவார் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் கூறுகின்றன.








