Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஹேமகவினுக்கு அரச மன்னிப்பு வாய்ப்பு மிக குறைவே
தற்போதைய செய்திகள்

ஹேமகவினுக்கு அரச மன்னிப்பு வாய்ப்பு மிக குறைவே

Share:

கம்போடியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி,போதைப்பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது அந்த நாட்டின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஒரு மலேசியப் பிரஜையான கே. ஹேமகவினுக்கு அரச மன்னிப்பு கிடைக்கும் வாய்ப்பு மிககுறைவே என்று விஸ்மா புத்ரா​ தெரிவித்துள்ளது.

தனது சிறைத்தண்டனையில் குறைந்த பட்சம் 20 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு சிறைத் தண்டனை அனுபவித்து இருந்தால் மட்டுமே அவருக்கு அரச மன்னிப்பு கிடைப்பதற்கு குறித்து பரி​சீலிக்கப்படும். தவிர சிறைத்தண்டனையில் ஒரு வருடம் குறைக்கப்படலாம் அல்லது ​மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படலாம் என்று வெளியுறவு துணை அமைச்சர் முகமது ஆலமின் தெரிவித்தார்.

ஹேம கவின், தமது காதலி மற்றும் அவரின் அக்காள், அவரின் காதலன் ஆகியோர் கம்போடியா நாட்டிற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள கடந்த 2016 ஆம் அந்த இந்தோ - சைனா நாட்டிற்கு சென்றிருந்த போது, போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

ஹோட்டல் அறையில் போதைப்பொருளுடன் பிடிபட்ட ஹேமகவினுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கம்போடியா தலைநகர் நோன்பென் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஹேமகவினை விடுவிப்பதற்கு அவரின் தந்தை எம். கார்த்திகேசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்விக் கண்டன.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்