Jan 20, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டம்  கொடூரமானது, தேவையான மாற்றங்கள் வேண்டும்
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டம் கொடூரமானது, தேவையான மாற்றங்கள் வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.18-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மா, மிகக் கொடூரமானச் சட்டமாகும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் வர்ணித்துள்ளது.

அந்த கொடுங்கோல் சட்டம், மலேசியா போன்ற நாட்டிற்கு நீதித்துறைக்கும், சட்டமுறைக்கும் பொருந்தாத காலாவதியான ஒன்றாகும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வாஹாப் வர்ணித்துள்ளார்.

சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட சொஸ்மா சட்டத்தில் உள்ள ஓட்டைகள், அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் நிலைப்பாடானது, சொஸ்மா சட்டம் அகற்றப்பட வேண்டும். அதனை அரசாங்கம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வழக்கறிஞர் மன்றம் நீண்ட காலமாகவே கோரி வருகிறது. அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டிய அவசியத்தை வழக்கறிஞர் மன்றம் மீண்டும் வலியுறுத்துவதாக எஸ்ரி அப்துல் வாஹாப் தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் அனுமதி கிடையாது என்பதை அந்தச் சட்டத்தின் 13 ஆவது பிரிவு வலிறுத்துகிறது. நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமலேயே விசாரணைக் கைதிகளை 28 நாட்கள் வரை தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டத்தின் 4 ஆவது உட்பிரிவு 5 வகை செய்வதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News