சுங்கை பட்டாணி, செப்டம்பர்.13-
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தேசியப் பள்ளிகளில் தமிழ், சீன மொழிகள் போதிக்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் இன்று பரிந்துரை செய்துள்ளார்.
இனங்களுக்கு இடையிலான பேதங்களுக்கு மொழி மாறுபாடு முக்கியக் காரணமாக விளங்குகிறது. எனவே மலேசிய மொழிகளை அனைத்து மாணவர்களும் பயிலும் வண்ணமாக மலாய்ப் பள்ளிகளில் தமிழ், மற்றும் சீன மொழிகள் போதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இணங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்த முடியும் என்று குபாங் கிரியான் நாடாளுமன்ற உறுப்பினரான துவான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.








