Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்தரங்க உறவை மேற்கொள்ள வேண்டாம்

Share:

அரசாங்க இலாகா மத்தியில் திருமணம் ஆனவர்கள் அந்தரங்க உறவை வைத்து கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சில அரசாங்க ஏஜென்சிகள் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகைய அந்தரங்க உறவை வைத்துக் கொள்வதால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதிப்படைவதுடன் அவர்கள் பணியாற்றக்கூடிய அரசாங்க பணித்தன்மையில் திறன் செயல்பாடு குறைவு ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

திருமண புரிந்தவர்கள் அந்தரங்க உறவை வைத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மலேசிய சுங்கத்துறை, விவசாய அமைச்சு, மலேசிய இஸ்லாமிய சமய மன்றம் ஆகியவை ஒரு சுற்றறிக்கையில் தங்கள் ஊழியர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளன.

இவை ஒரு ஒழுக்க கேடான குற்றச்செயல் மட்டுமில்லாமல் அப்படி கண்டெடுக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 498 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டபடக்கூடிய சாத்தியம் ஏற்படும்.

ஆகையால் அரசாங்க ஊழியர்களான திருமண புரிந்தவர்கள் நன்னெறி பண்புகளை கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

Related News