ஜோகூர் பாரு, ஜூலை.30-
தனது ஒரே மகன் திஷாந்த் கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்டு, மீள முடியாதத் துயரத்திற்கு ஆளாகி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்தச் சிறுவனின் 30 வயது தாயார், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
அந்த மாதுவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று முகமட் சொஹைமி குறிப்பிட்டார்.
தனது மகனின் இறப்புச் செய்தியைக் கேட்டு, பிரம்மைப் பிடித்தவரைப் போல் காணப்பட்ட அந்த மாது, மகனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள தற்கொலை முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
எனினும் அந்த மாது காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை முகமட் சொஹைமி இஷாக் உறுதிப்படுத்தினார்.








