கூலாய், செப்டம்பர்.30-
ஜோகூர், கூலாயில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோகூர் சமய இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று ஜோடியினரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்காம் படிவ மாணவி ஒருவரும் அடங்குவர் என்று சமய இலாகா பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சோதனை நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.








