Jan 20, 2026
Thisaigal NewsYouTube
இளைஞர்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் பிரதமர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

இளைஞர்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் பிரதமர் வலியுறுத்து

Share:

நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக திகழும் இளம் தலைமுறையினர், தங்களுக்குள்ளும் சமூகத்திலும் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதற்கான கொள்கைகள் மற்றும் இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

தற்போது தாம் பிரதமர் பதிவில் இருப்பதனால், கூர்மையாக சிந்திக்கக்கூடிய, அறிவை வளர்த்துக்கொண்டு, பிரச்சினைகளை நன்கு சீர்தூக்கி பார்க்ககூடிய, நன்மை தீமையை உணர்ந்து செயல்படக்கூடிய, ஒரு விவேக இளைய தலைமுறையை உருவாக்க விரும்புவதாக இன்று லங்காவி தொழிற்கல்லூரியில் உரையாற்றிய போது பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News