வருகின்ற சட்ட மன்ற தேர்தலை முன்னீட்டு, சிலாங்கூர் மாநிலத்தில் சட்டமன்ற தொகுதிகள் கட்சிகளுக்குப் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டன என சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரும் சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹரப்பான் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்துள்ளார்.
பாரிசான் நெசனல் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் இடையே தொகுதிகள் பிரிக்கும் செயல் இழுவையில் இருந்து வந்த நிலையில், இன்று முற்றாக அதற்கு ஒரு தீர்வு காணப்பட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்த முறை ஒற்றுமை அரசாங்கத்தைக் கருத்தில் கொண்டு பாரிசான் நெசனலுக்கு 20 சதவிகிதல் கூடுதலான சட்டமனற தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.








