Mar 15, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் நீதிபதிக்கு தண்டனை குறைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

முன்னாள் நீதிபதிக்கு தண்டனை குறைக்கப்பட்டது

Share:

குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கோலகுபு பாரு செஷன்ஸ் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனையாக குறைத்தது.

அதேவேளையில் அந்த முன்னாள் நீதிபதிக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 25 ஆயிரம் வெள்ளி அபராதத் தொகை, 12 ஆயிரம் வெள்ளியாக குறைக்கப்பட்டது.

50 வயதுடைய அஸ்மி முஸ்தாஃபா அபாஸ் என்ற அந்த முன்னாள் நீதிபதி, தனக்கு எதிராக தண்டனையை முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செஷன்ஸ் நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிட தாம் விரும்பவில்லை என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் ஒரு முன்னாள் நீதிபதியான அஸ்மி முஸ்தாஃபா அபாஸ் குற்றவாளியே என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஹஸ்புல்லா அடாம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து