தபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை வெளியிடுவதாக முன்பு கூறியிருந்தும், இதுவரை வெளியிடாதது ஏன் என்று சில தரப்பினர் கேள்வி எழுப்பி வருவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அறிக்கையை வெளியிடுவதில் தமக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும், அதை வெளியிட தாம் சம்மதிப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வரும் புதன்கிழமை இந்த விவகாரத்தை அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், அறிக்கையை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்ற முழு நம்பிக்கை தமக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வளாகத்தில் இன்று நடைபெற்ற எச்.ஆர்.டி கார்ப்பரேஷன்- இன் தேசிய பயிற்சி வார நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.








