கோலாலம்பூர், ஜனவரி.03-
கோலாலம்பூர், ஜாலான் செந்தூல் பசாரில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த, சிறிய சூதாட்ட மையமானது நேற்று போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் கண்டறியப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அந்த சூதாட்ட மையத்தில் இருந்த 23 முதல் 42 வயதுடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 3 மலேசியர்களும், 1 கனடா நாட்டைச் சேர்ந்தவரும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர், அந்த சூதாட்ட மையத்தின் நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவ்விடத்தில் சூதாட்டம் நடத்துவதற்குத் தேவையான அட்டைகள், போக்கர் டேபிள்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.








