கோலாலம்பூர், செப்டம்பர் 30-
Shining Starz நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி , Quill City Mall Kuala Lumpur பேரங்காடி மையத்தில் Fashion with Starz 1.0 எனும் புடவைத்துணியை அடிப்படையாக கொண்ட மாபெரும் ஆடை அலங்கார பேஷன் ஷோ போட்டி, மிக பிரமாண்டபமாக நடைபெற்றது.

இந்தியர்களின் பாரம்பரிய புடவையான சேலைத்துணியை அடிப்படையாக கொண்டு, அதன் வாயிலாக வடிவமைக்கப்படும் பலதரப்பட்ட ஆடைகளில் இந்தியப் பெண்கள் பவனி வந்து, நமது கலாச்சாரத்தை பறைசாற்றும் நோக்கில் இந்த Fashion with Starz 1.0 நடத்தப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் 6 க்கும் 15 க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்கள் என இரண்டு பிரிவுகளாக Fashion with Starz 1.0 ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேஷன் ஷோவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு எண்மர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த எண்மரில் தனது தனித்துவமான ஆடை அலங்காரத்தை வெளிப்படுத்திய Adell என்பவர் / Fashion with Starz 1.0 வெற்றியாளராக வாகை சூடினார். அவருக்கு கீரிடம் அணியப்பட்டு, ஆயிரம் வெள்ளி ரொக்கப் பரிவு வழங்கப்பட்டது.
சிறார்கள் பிரிவில் பவிஷா கவுர் வெற்றிப்பெற்றார். அவருக்கு கீரிடம் அணியப்பட்டு, 500 வெள்ளி ரொக்கம் வெற்றித் தொகையாக வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசாக கீரிடம், பட்டம் மற்றும் Sash வழங்கப்பட்டது.

( இளைஞர் பிரிவு )
Shining Starz தலைமை செயல்முறை அதிகாரி சாதனை சுடர்மணி மாஸ்டர் உகாந்தருன் சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு PKR கட்சியின் உலு சிலாங்கூர் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவரும், PeBs ( பெப்ஸ் ) எனப்படும் Penggerak Belia Selangor உலு சிலாங்கூர் தலைவருமான கலைச்செல்வன் ஜெகநாதன் மற்றும் Super Speed Express & Sai FM Network தலைவர் சிவகுமார் அப்பாராவ் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
Shining Starz, நிர்வாக குழுவினர், இதற்கு முன்பு, கடந்த 4 ஆண்டுகளாக பாட்டுப்போட்டி, Futsal போட்டி மற்றும் கீழ் பேராக் மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவை வெகு சிறப்பாக நடத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.













