தஞ்சோங் மாலிம், அக்டோபர்.06-
அடுத்த ஆண்டு மலேசிய உயர்கல்வித் திட்டம் 2026–2035 தொடங்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 2026 நிதியில் உயர்கல்வி அமைச்சுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் உயர்கல்வி முறையை மேம்படுத்தும் இப்புதியத் திட்டத்திற்காக பல துறைகளில் நிதி ஒதுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சையும், உயர்கல்வி அமைச்சையும் இணைத்தால், கல்விக்கான நிதி கூடுதலாகவே ஒதுக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள ஸம்ரி, இம்முறை அதை விடக் கூடுதலாக நிதியை பிரதமர் வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிதி ஒதுக்கீடு, நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய மாற்றங்கள் மற்றும் புதுமை முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








