Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்

Share:

பாயான் லெப்பாஸ், செப்டம்பர்.22-

பினாங்கு, பாயான் லெப்பாஸில் பணியிடத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக சித்தரிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வரைலானதைத் தொடர்ந்து, அத்தகைய ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படு ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி மதியம் 12.17 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து அந்த பெண் பணிபுரியும் நிர்வாகம் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாஸி அடாம் தெரிவித்தார்.

அந்த காணொளி தொடர்பில் புலன் விசாரணை மேற்கொண்ட போலீசார் , அதே தினத்தன்று மாலை 5.58 மணியளவில் பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தில் அந்த நபரைக் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர் தற்போது குற்றவியல் 509 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.

Related News