Oct 5, 2026
Thisaigal NewsYouTube

50 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நிறுவன இயக்குநர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
50 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நிறுவன இயக்குநர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக்டோபர்.01-

50 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நிறுவன இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

39 வயது P. குகன் அருணாச்சலம் என்ற அந்த நிறுவன இயக்குநர், அறக்கட்டணை மற்றும் மேலாண்மை நிறுவனமான யுபிபி அமானா பெர்ஹாட் மீது மலேசிய பங்குப் பத்திர ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 50 மில்லியன் ரிங்கிட் லஞ்சத்தைக் கோரியதாகக் குற்றம் சுமத்தப்பட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் தேதி கோலாலம்பூர், பங்சார், ஜாலான் பங்குங்கில் உள்ள ஓர் உணவகத்தில் குகன் அருணாச்சலம் இக்குற்றத்தைப் புரிந்தததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ண்டு சிறை மற்றும் பெறப்பட்ட லஞ்சத் தொகைக்கு நிகராக ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் குகன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →