Oct 2, 2026
Thisaigal NewsYouTube

54 மலேசியர்கள் எங்கே? — நேபாள பிரதமர் முழு ஒத்துழைப்பு நல்க உறுதி! – பிரதமர் அன்வார் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
54 மலேசியர்கள் எங்கே? — நேபாள பிரதமர் முழு ஒத்துழைப்பு நல்க  உறுதி! – பிரதமர் அன்வார் தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து காணாமல் போன 54 மலேசியர்களின் நிலை குறித்து குடும்பங்கள் பதற்றத்துடன் காத்திருக்கும் நிலையில், அவர்களின் நிலையை விரைவாக உறுதிப்படுத்த நேபாள அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா உறுதியளித்துள்ளார்.

தம்முடன் தொலைபேசியில் பேசியபோது இந்த உறுதிமொழியை பாலேந்திர ஷா வழங்கியதாக அன்வார் தெரிவித்தார்.

“காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து விரைவில் தகவல் பெறுவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக நேபாள பிரதமர் உறுதியளித்துள்ளார்” என்று அன்வார் கூறினார்.

இதையடுத்து, நேபாள அதிகாரிகளுடன் உடனடியாக பேச்சு நடத்த சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுகி மொக்தாருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்கு பேரழிவில் இதுவரை 1,451 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,700 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 600-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள்.

முதலில் 55 மலேசியர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மலேசியா திரும்பியுள்ளார். இதனால் தற்போது 54 மலேசியர்களின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →