Sep 22, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது தவிர்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளிப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது தவிர்க்கப்படும்

Share:

பள்ளிப்​ பேருந்து மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து போன்றவை போக்குவர​த்து கட்டணத்தை உயர்த்துவதை தவிர்ப்பதற்காக அவற்றை வழிநடத்தும் இலக்குக்குரிய நிறுவனங்களுக்கு டீசல் உதவித் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாக துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்கள், பயணக்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார். இந்த உதவித் தொகை இவ்வாண்டின் இரண்டாவது காலண்டில் வழங்கப்படும் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News