Oct 9, 2026
Thisaigal NewsYouTube

டாஏஷ் சித்தாந்தத்தைக் கொண்டு வர முயற்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டாஏஷ் சித்தாந்தத்தைக் கொண்டு வர முயற்சி

கோலாலம்பூர், ஜூன்.28-

தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று நம்பப்படும் மலேசியாவில் பிடிபட்ட 36 வங்காளதேசிகள், டாஏஷ் சித்தாந்தத்தை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விளக்கம் அளித்துள்ளார்.

அரச மலேசியப் போலீஸ் படை, இந்த தீவிரவாதக் குழுவின் உறுப்பினர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு வேரறுத்த போதிலும் தற்போது பிடிப்பட்டவர்கள் சிலர், தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் தங்கள் சமூகத்தின் மத்தியில் தீவிரவாதக் குழு ஒன்றை அமைப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சைஃபுடின் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →