மலாக்கா, டிசம்பர்.12-
36 ஆயிரத்து 100 ரிங்கிட் லஞ்சம் வாங்கியது தொடர்பில் 16 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த சாலை போக்குவரத்து இலாகாவான கேபிஜேவின் அமலாக்க உதவி அதிகாரி ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 12 ஆண்டுச் சிறையும், 2 லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
43 வயது அஹ்மாட் ஜாமில் சாரு என்ற அதிகாரி 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
மூவார் ஜேபிஜே அலுவலகத்தில் பணியாறிய போது அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








