Jul 1, 2026
Thisaigal NewsYouTube
செராஸில் கடத்தல் சம்பவம்: ஏர்பிஎன்பி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சீன நாட்டவர் மீட்பு
தற்போதைய செய்திகள்

செராஸில் கடத்தல் சம்பவம்: ஏர்பிஎன்பி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சீன நாட்டவர் மீட்பு

Share:

செராஸ் பகுதியில் நடந்த சீன நாட்டவர் கடத்தல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, 36 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரை கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

இவர், சூதாட்டக் கடன் தொடர்பான பிரச்சினையால் செராஸ், ஜாலான் பீல் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி விடுதியில் கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து செராஸ் போலீஸ் தலைவர் ரோஸ்டி டாவுட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பருக்காக “உத்தரவாத நபராக” இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நண்பர் சுமார் 1 லட்சம் ரிங்கிட்டிற்கு சூதாட்டக் கடன் வாங்கிய பின்னர் மாயமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அக்கடனை திருப்பிச் செலுத்த வற்புறுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட நபரை மூன்று நாட்கள் ஏர்பிஎன்பி வீடு ஒன்றில் அடைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை