Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ரஃபிஸி ரம்லியைத் தொடர்ந்து மேலும் ஓர் அமைச்சர் பதவி விலகினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஃபிஸி ரம்லியைத் தொடர்ந்து மேலும் ஓர் அமைச்சர் பதவி விலகினார்

கோலாலம்பூர், மே.28-

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் நூருல் இஸாவிடம் தோல்விக் கண்ட ரஃபிஸி ரம்லி, பொருளாதார அமைச்சர் பதவிலிருந்து விலகியதைப் பின்பற்றி, இயற்கை வள அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் தனது அமைச்சர் பதவியைத் துறந்துள்ளார்.

செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினரான நிக் நஸ்மி, உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

மலேசிய வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியிருப்பது இதுவே முதல் முறையாகும். தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செத்தியாவங்சா பிகேஆர் டிவிஷன் தேர்தலில் தொகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்விக் கண்டவரான நிக் நஸ்மி, உதவித் தலைவர் பதவியும் கைநழுவிப் போனதால், தாம் அமைச்சர் பதவியில் தொடர்ந்து அலங்கரிப்பது முறை அல்ல என்று அறிவித்துள்ளார்.

இவரது பதவித் துறப்புக் காலம் ஜுலை 4 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. பதவி விலகலுக்கானக் கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வழங்கி விட்டதாகவும் நாளை முதல் விடுப்பில் செல்வதாகவும் நிக் நஸ்மி அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை