Feb 8, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா - மலேசியா வர்த்தக உறவில் புதிய மைல்கல்: 'CECA' ஒப்பந்தத்தை நவீனப்படுத்த கோரிக்கை
தற்போதைய செய்திகள்

இந்தியா - மலேசியா வர்த்தக உறவில் புதிய மைல்கல்: 'CECA' ஒப்பந்தத்தை நவீனப்படுத்த கோரிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

பத்தாவது இந்தியா-மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றம், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப மலேசியா-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமான CECA- வை நவீனப்படுத்த வலியுறுத்தியுள்ளது.

பாரம்பரிய வர்த்தகத்தைத் தாண்டி, மென்பொருள், டிஜிட்டல் தளங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்த இக்கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

UPI-PayNet இணைப்பு, நிதித் தொழில்நுட்பம் மற்றும் AI திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு மூலம் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த மன்றம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 18.2 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் வலுவாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார். எதிர்கால வளர்ச்சியானது வெறும் பொருட்களுடன் நின்றுவிடாமல், மென்பொருள் மற்றும் டிஜிட்டல் தளங்களைச் சார்ந்தே அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் அசுர வளர்ச்சியையும், மலேசியாவின் சர்வதேச உற்பத்தித் திறனையும் ஒன்றிணைத்து, செமி-கண்டக்டர் மற்றும் ஏஐ (AI) போன்ற உயர் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளும் புதிய மைல்கற்களை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News