கோத்தா பெலுட், ஜூலை.30-
சபா மாநிலத்தில் ஆகக் கடைசியாக நிகழ்ந்ததாகக் கூறப்படும் லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கோத்தா பெலுட் எம்.பி. இஸ்னாராய்சா முனிரா மஜ்லிஸ்கே ட்டுக் கொண்டார்.
எஸ்பிஆர்எம் தீபகற்பத்தில் அதீத கவனம் செலுத்தும் அதே வேளையில் சபாவில் நடந்ததாகக் கூறப்படும் லஞ்ச ஊழல் விவகாரங்களிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த பெண் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.








