போர்ட்டிக்சன், செப்டம்பர்.14-
போர்ட்டிக்சன் கடற்கரையின் பெயரை பந்தாய் டெர்மாகா என மாற்றுவதற்கு சுற்றுலாத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் பெயர் மாற்றம், சுற்றுலாப் பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைத்துவிடும் என மலேசிய சுற்றுலாச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஶ்ரீ கணேஷ் மைக்கல் எச்சரித்துள்ளார்.
தற்போதைய புகழ் பெற்ற போர்ட்டிக்சன் பெயரை மாற்றுவது, தேவையற்ற செலவுகளை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் இந்தப் பெயரை மாற்றுவதற்குப் பதிலாக, சுற்றுப் பயணிகளுக்கு சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








