Jan 5, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: நால்வர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், ஜனவரி.03-

பினாங்கில் சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பறிமுதல் நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட நால்வரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பினாங்கு திமோர் லாவுட் மாவட்டத்தின் ஜார்ஜ் டவுன் பகுதியில் நேற்று மதியம் முதல் இன்று அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் இந்தப் போதைப் பொருள் விநியோகக் கும்பல் முறியடிக்கப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

19 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ அஸிஸி தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட சோதனையில் ஜார்ஜ்டவுன் பகுதியில் போதைப் பொருள் விநியோகஸ்தர்களாக செயல்பட்ட ஓர் ஆணும் அந்த வெளிநாட்டுப் பெண்ணும் பிடிபட்டனர்.

இந்தக் கும்பல் போதைப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கும், பின்னர் அவற்றை விநியோகம் செய்வதற்கும் ஒரு மையமாகச் செயல்பட்டு வந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ அஸிஸி தெரிவித்துள்ளார்.

Related News