Oct 16, 2026
Thisaigal NewsYouTube

காஸ்டிலோ என்ற நபரை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காஸ்டிலோ என்ற நபரை போலீஸ் தேடுகிறது

கோலாலம்பூர், டிச.7-


கோலாலம்பூரில் செந்தூல் மற்றம் கெப்போங் ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து மாத காலமாக கேபல் திருட்டுச் சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கொள்ளைக்கும்பலுக்கு பின்னணியில் மூளையாக இருந்து செயப்பட்ட ஆசாமி என்று நம்பப்படும் காஸ்டிலோ என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேபல் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த நவம்பர் 20, 30 ஆகிய தேதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்கில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் கெப்போங், ஜாலான் லாங் கூனிங் என்ற இடத்தில் நிகழ்ந்த கேபல் திருட்டிற்கு காரணமானவர்கள் என்று நம்பப்படும் ஐந்து சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்து இருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் சுகார்னோ முகமட் ஜஹாரி தெரிவித்தார்.

இந்தக் கும்பலின் முளையாக இருந்து செயல்பட்டவன் என்று நம்பப்படும் தேடப்பட்டு வரும் 23 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி, கேபல் திருட்டு தொடர்பில் ஏற்கனவே ஐந்து குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →