தடைசெய்யப்பட்ட பகுதிகள் இடங்கள் சட்டம் 1959 திருத்தப்படுவது குறித்தும், தேசிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் பல முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
கடந்த 1959ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தச் சட்டம் ஒருமுறை கூட திருத்தப்பட்டதில்லை. தற்காலச் சூழலில் அது பொருந்தக் கூடிய அளவுல் அந்த சட்ட திருத்தம் அமையும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.
மேலும், சட்டத்தை செயல்படுத்த ஒரு அரசாங்க ஏஜன்சியால் இயலாது பல அரசாங்க ஏஜென்சிகளுக்கு அந்த பொறுப்பை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சட்டதிருத்தம் குறித்த ஆய்வுகள் கடந்த ஆண்டு முதலே தொடங்கப்பட்ட நிலையில் அதன் மேம்பாடு குறித்த பயிலரங்குகள் மிக விடைவில் நடத்தப்பட உள்ளன.
மேலும், இணையப் பாதுகாப்பு குறித்து தமது அமைச்சு புதிய சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாகவும், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அச்சட்டம் நடப்புக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் சைபுதீன் நசுஷன் மேலும் சொன்னார்.








