Oct 18, 2026
Thisaigal NewsYouTube

நிதி உதவிக்கு இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நிதி உதவிக்கு இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர், அக்டோபர் 07-

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி கூடங்களில்
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் மித்ரா 4.0
நிதியுதவிக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவிக்கு டிப்ளோமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மீது உயர்கல்வி கூடங்களில் கட்டொழுங்கு தொடர்பான புகார்கள் ஏதும் இருக்கக்கூடாது மற்றும் கட்டாயம்
அவர்கள் BSN வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டும்.

இந்த உதவிக்கான விண்ணப்பம் இன்று திங்கட்கிாமை தொடங்கி அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை திறந்திருக்கும். இந்த நிதி உதவிக்கான விண்ணப்பப் பாரத்தை கீழ் காணும் இணையத் தள அகப்பக்கத்தில் பெறலாம்..

இந்த உதவிக்கு விண்ணப்பிக்க அடையாள அட்டை நகல், பிறப்பு பத்திர நகல், பெற்றோர்களில் ஊதிய சரிபார்ப்பு, உயர்கல்வி கூடங்களின் நுழைவு அனுமதி கடிதம் மற்றும் BSN வங்கி எண் போன்ற ஆவணங்கள் தேவை என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..

Screen

https://rb.gy/baxg3n

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →