பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மிக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவர் இறந்து விட்டதைப் போல தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நபர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட நபர், தமது கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்பட்ட போதிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு எதிராக தவறான தகவலை பரப்பியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபர், ஹாடி அவாங்கிற்கு எதிராக ஏற்படுத்திய அவதூறான தகவலைப் போலவே முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு எதிராகவும் ஒரு கருத்தை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ள ஹாடி அவாங்கின் உடல் நிலை குறித்து அவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பிரதமர் நலம் விசாரித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


