Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பட்டறையில் வெடி விபத்து, ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

பட்டறையில் வெடி விபத்து, ஒருவர் பலி

Share:

ஜோகூர்பாரு, ஸ்குடாய் அருகே தாமான் முத்தியாரா ரினி, ஜாலான் பெர்ஸியாரான் முத்தியாரா மாஸ் என்ற இடத்தில் வாகனப்பட்டறை ஒற்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அதன் உரிமையாளர் உயிரிழந்தார். பலத்த காயங்களுக்கு ஆளான 41 வயதுடைய அந்த நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார். அவருடன் பணியில் இருந்த மேலும் ஒருவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழும் போது அதன் உரிமையாளரும், உதவியாளரும் மட்டுமே பட்டறைக்குள் இருந்ததாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.

கால் முறிவு ஏற்பட்டு, உடலில் பலத்த காயத்திற்கு ஆளாகியுள்ள 27 வயதுடைய உதவியாளர் சுல்தான் அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஹ்மாட் அரிஃபின் மேலும் விவரித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!