40 வயதுடைய தொழிற்சாலை ஊழியர் ஒருவர் மோசடி கும்பலிடம் 87,400 வெள்ளியை இழந்தார். அந்நபர் குறுகிய காலத்திற்குள் அதிக லாபத்தை ஈட்டமுடியும் என்று நம்பி பெரும் தொகையை இழந்திருப்பதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார். கடந்த மே 4 ஆம் திகதி ஸ்தோக் மார்கெட் ஸ்தேபல் ப்ரோஃபிட் ப்ரெக்டிக்கல் ட்ரேய்னிங் கேம்ப் எனும் புலனக்குழுவின் மூலம் தமக்கு முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதன் காரணமாக கடந்த ஜூன் 12 முதல் அவர் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். மிக குறுகிய காலத்திற்குள் அவரது ஆரம்ப முதலீடான 63,400 வெள்ளி கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதாவது 180,000 வெள்ளி ஆக உயரும் என்று அந்த கும்பல் நிர்வாகியால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்நபர் பணத்தை திரும்ப பெற விரும்பிய போது கட்டணமாக 24,000.90 வெள்ளி அவரிடம் கோரப்பட்டதாக ரஹ்மாட் கூறினார். அதன்படி பணத்தை செலுத்திய பின் அந்நபர் புலனக்குழுவிலிருந்து நீக்கப்பட்டத்துடன் தடை செய்யப்பட்டதாகவும் ரஹ்மாட் தெரிவித்தார். பிறகு, தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதை எண்ணி போலீஸ் புகார் செய்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


