ஜோகூர் பாரு, செப்டம்பர்.04-
ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பாதுகாவலர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்தக் குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜோகூர் பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 1,800 ரிங்கிட் அபராதம் விதித்தது.
38 வயது S. ஜேக்சன் ராஜ் என்ற அந்த நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கெலாங் பாத்தாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் அதிஃபா ஹஸிமா வாஹாப் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஜேக்சன் ராஜ், ஒரு நேப்பாளியரான பாதுகாவலரைத் தாக்கிய குற்றத்தை ஒப்பினார்.








