Oct 2, 2026
Thisaigal NewsYouTube

எஸ்பிஆர்எம் இரண்டு அனைத்துலக விருதுகளை வென்றுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்பிஆர்எம் இரண்டு அனைத்துலக விருதுகளை வென்றுள்ளது

புத்ராஜெயா, டிசம்பர்.06-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு அனைத்துலக விருதுகளை வென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற PR Daily Awards 2025, விருதளிப்பு விழாவில் மலேசியாவில் லஞ்ச ஊழலைத் துடைத்தொழிப்பதற்கு வலிமைமிக்க அமைப்பாக விளங்கி வரும் எஸ்பிஆர்எம்மிற்கு இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சிகாகோவைத் தளமாகக் கொண்ட ராகன் கம்யூனிகேஷன்ஸ் (Ragan Communications) நிறுவனம், எஸ்பிஆர்எம்மிற்கு 'PR Daily Awards 2025'-ல் என்ற இரண்டு கெளரவ விருதுகளை வழங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு எனும் Use of AI மற்றும் நெருக்கடி மேலாண்மை எனும் Crisis Management ஆகிய இரண்டு பிரிவுகளில் எஸ்பிஆர்எம்மிற்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

எஸ்பிஆர்எம் வியூக தொடர்பு பிரிவின் இயக்குநர் ஹிஷாம் முகமட் யுசோஃப் கூறுகையில், தகவல் தொடர்பு செயல்திறனை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காகவும், துல்லியமாக பதிலளிக்கக்கூடியதாக இருப்பதை உறுதிச் செய்வதற்காகவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான பிரிவில் எஸ்பிஆர்எம்மிற்கு இந்த அனைத்துலக இரண்டு விருதுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →