மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது, கிட்டத்தட்ட 9 கோடியே 70 லட்சம் வெள்ளி தொடர்புடைய லஞ்ச ஊழல் விசாரணையாகும் என்று எஸ்.பி.ஆர்.எம். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனை உறுதிபடுத்தியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, தங்களின் புலன் விசாரணைக்கு உதவுவதற்கு மேலும் சிலரும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக கோடி காட்டியுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனத்தை அமைப்பதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் சுய நலன் சார்ந்த அம்சங்கள் உள்ளன என்று தெரிந்திருந்தும் அவர்கள் அந்த நிறுவனத்தைத் தோற்றுவித்துள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள், நேற்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள மனித வள அமைச்சில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியைக் கைது செய்துள்ளனர்.
இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் மனித வள அமைச்சை சேர்ந்த மற்ற தனிநபர்களும், அதன் தொடர்புடையு ஏஜென்சிகளும் சம்பந்தப்பட்டுள்ளனவா? என்பதை புலன் விசாரணை செய்யும் நோக்கில் இந்தக் கைது நடவடிக்கை அமைந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித வள அமைச்சர் சிவகுமாரின் சிறப்பு அதிகாரி உட்பட இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு ஏதுவாக அவர்கள் 6 தினங்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


