Oct 2, 2026
Thisaigal NewsYouTube

நீதிக்கோரி பாதிரியாரின் மனைவி கடிதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நீதிக்கோரி பாதிரியாரின் மனைவி கடிதம்

கோலாலம்பூர், டிசம்பர்.06-

ஒரு பாதிரியரான ரேய்மண்ட் கோ, மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து நீதித்கோரி அவரின் மனைவி லியூ, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிற்குத் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தமது கணவர் காணாமல் போனது குறித்து போலீசாரும் அரசாங்கமும் பெரும் தொகையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் தமது கணவருக்கு உண்மையிலேயே என்ன நடந்தது, எத்தகைய தீங்கு இழைக்கப்பட்டது, அவர் எங்கே போன்ற கேள்விகள் மனக்கிடங்கில் கேள்விக் கணைகளாக உள்ள நிலையில் தங்கள் குடும்பத்திற்கு கோபிந்த் சிங் ஆதரவாக இருந்து, உதவ வேண்டும் என்று லியூ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, தனது கணவர் ரேய்மண்ட் கோ, காணாமல் போன தினத்திலிருந்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் நாள் வரை ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் ரிங்கிட் வீதம் இழப்பீடு என்று கணக்கிடப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.

ஆனால், ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட தனது கணவருக்கு உண்மையிலே என்ன நேர்ந்தது என்பது அமைச்சர் கோபிந்த் சிங் ஆராய வேண்டும் என்று லியூ தனது திறந்த மடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →