Oct 17, 2026
Thisaigal NewsYouTube

யின்ஹிங் சூறாவளி வீசலாம், மெட் மலேசியா எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யின்ஹிங் சூறாவளி வீசலாம், மெட் மலேசியா எச்சரிக்கை

சபா, நவ.8-

சபா, கூடாட்டிலிருந்து சுமார் ஆயிரத்து 313 கிலோ மீட்டர் தூரத்தில் யின்ஹிங் சூறாவளி வீசலாம் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ், லாவோக் நகரிலிருந்து வட மேற்கே 118 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சூறாவளி நிலைக்கொண்டு இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

காலையில் பதிவாகியுள்ள கணக்கெடுப்பின்படி யின்ஹிங் சூறாவளி, மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் அதிகப்பட்சமாக 130 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்று மெட் மலேசியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்சீனாக் கடலில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்படும் என்று அது தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →