பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கையம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம், நாளை மறுநாள் நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நாளை நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்கள் மூல விக்கிரத்திற்கு எண்ணெய் சாத்துதல் நிகழ்வு நடைபெறும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீ மகா துர்க்கையம்மன் விமான திருக்குட நன்னீராட்டு பெருவிழா, தமிழகம், கும்பகோணம், பட்டிஸ்வரர் கோயில் சிவச்சாரியார் பாபு குருக்கள், தேவஸ்தானத்தின் இதர குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ துர்க்கையின் அருளை பெற்று உய்யுமாறு தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.








